மே18 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : ஆத்மசாந்தி பிரார்த்தனைக்கு அழைப்பு

Sri Lankan Tamils Mullaitivu Mullivaikal Remembrance Day Sri Lanka Final War
By Independent Writer May 16, 2026 07:14 AM GMT
Report
Courtesy: தவசீலன்

2009 இல் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையின் போது உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் வழிபாடும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியில் உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் நாளை மறுதினம் (18) இடம்பெறவுள்ள  ஆத்மசாந்தி பிரார்த்தனையில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஏற்பாட்டாளர்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். 

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

விடுக்கப்பட்டுள்ள அழைப்பு 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்திலே முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்காண அப்பாவி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கான நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.

தமிழினப்படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை மறுதினம் (18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளது.

மே18 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : ஆத்மசாந்தி பிரார்த்தனைக்கு அழைப்பு | May 18 Mullivaikal Commemoration In Mullaitivu

இதன்போது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் வருடம்தோறும் முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்திலே முன்னெடுக்கப்படும்.

அந்தவகையில் இம்முறையும் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் குறித்த இடத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம்

இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம்

சுடரேற்றி அஞ்சலி 

காலை ஆறு மணி முதல் ஒன்பது முப்பது வரை ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்க்கடன் வழிபாடும் இடம்பெற்று பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்காக குறித்த நிகழ்வு நிறுத்தப்படும்.

மே18 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : ஆத்மசாந்தி பிரார்த்தனைக்கு அழைப்பு | May 18 Mullivaikal Commemoration In Mullaitivu

பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நிறைவடைந்ததும் மீளவும் குறித்த இடத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் இடம்பெறும்.

குறித்த கிரியைகளுக்காக பொதுமக்கள் எந்தப் பொருட்களையும் கொண்டுவரத் தேவையில்லை எனவும் உரிய நேரத்தில் வருகைதந்து உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாட்டிலும் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் கலந்து கொள்ளுங்கள்” என தெரிவித்தனர்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026