கனேடிய உயர்ஸ்தானிகருடன் மலையக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ்க்கும் மலையக மக்கள் முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நுவரெலியா கிரான் விடுதியில் இன்று(28) காலை நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது நாட்டில் காணப்படும் பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டம் இந்நாட்டிற்கு பொருத்தமில்லை எனவும் அச்சட்டத்தின் ஊடாக ஊடக அடக்குமுறை, தொழிற்சங்க அடக்குமுறை நிலவுவது மற்றும் மலையக கல்வி வளர்ச்சி தொடர்பாகவும் மலையக அபிவிருத்தி என்பவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணி
சந்திப்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஸ்ணன் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி பிரதி தலைவர் ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணி பதில் பொதுச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.