யாழில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு: சந்தேகநபர் கைது
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) - ஆவரங்கால் சிவன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றிரவு (26.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், ஆவரங்கால் சிவன் கோவிலில் திருடிவிட்டு மற்றொரு கோவிலிலும் திருட முற்பட்ட போதே அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில், சந்தேக நபரிடமிருந்து, திருடப்பட்ட பணத்தினையும் சில பொருட்களையும் காவல்துறை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், காவல்துறையினர் விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி