யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் துண்டிப்பு - கோர விபத்தால் நேர்ந்த துயரம்
அநுராதபுரத்தில் (Anuradhapura) இடம்பெற்ற விபத்தில் யாழைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று (02.04.2024) காலை அநுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தரின் காலே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.
துர்ப்பாக்கிய நிலை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்றில் முன்னால் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த லொறியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லொறி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை அநுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
