Sunday, Apr 13, 2025

பற்றி எரியும் மத்திய கிழக்கு..! விரையும் போர்க்கப்பல்கள் - பழிக்கு பழி தீர்ப்போம் என சூளுரை

Iran World Israel-Hamas War Iran-Israel Cold War
By Thulsi 8 months ago
Report

ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டதால் மத்திய கிழக்கு பகுதிகளில் உச்சக்கட்ட பதற்ற சூழல் நிலவி வருகிறது.

கடந்த புதன்கிழமை ஈரான் (iran) தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் ஹனியா (Ismail Haniyeh) படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலையை செய்தது இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா குறுகிய தூர ஏவுகணை ஒன்றால் கொல்லப்பட்டதாகவும் இந்த தாக்குதல் சதி திட்டத்தில் ஈரானில் உயர் பதவியில் உள்ளவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் ஈரானை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உச்சக்கட்ட பதற்றம்..! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பாரிய ஏவுகணை தாக்குதல்

உச்சக்கட்ட பதற்றம்..! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பாரிய ஏவுகணை தாக்குதல்

கடுமையாக பழிதீர்க்கப்படும்

இந்த படுகொலைச் சம்பவம் ஈரானை கொந்தளிக்க செய்துள்ளது. அதுவும் ஈரானுக்குள் நுழைந்தே ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொன்றதை ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பற்றி எரியும் மத்திய கிழக்கு..! விரையும் போர்க்கப்பல்கள் - பழிக்கு பழி தீர்ப்போம் என சூளுரை | Middle East War Tension Iran Attack On Israel

இதனால் இஸ்ரேலை சும்மா விடமாட்டோம். நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரான் அறிவித்தது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் ஆதரித்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம்சாட்டி உள்ளது.

அதற்கு உரிய முறையில் கடுமையாக பழிதீர்க்கப்படும் என ஈரான் புரட்சிகர காவல் படை சபதம் எடுத்துள்ளது.

வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான புதிய தகவல்

வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: வெளியான புதிய தகவல்

இஸ்ரேல் மீது ஏவுகணைக தாக்குதல்

இத்தகைய சூழலில் தான் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா (Hezbollah ) அமைப்பினர் கொத்து கொத்தாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர் உள்ளனர்.

பற்றி எரியும் மத்திய கிழக்கு..! விரையும் போர்க்கப்பல்கள் - பழிக்கு பழி தீர்ப்போம் என சூளுரை | Middle East War Tension Iran Attack On Israel

இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதனால் இஸ்ரேல் - லெபனான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது.

ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்களின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைக் காக்க கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப் போவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்காவுக்கு மரணம் மக்கள் கோஷம்: ஹமாஸ் தலைவர் மரணத்திற்கு பழி தீர்க்குமா ஈரான்

இஸ்ரேலுக்கு அமெரிக்காவுக்கு மரணம் மக்கள் கோஷம்: ஹமாஸ் தலைவர் மரணத்திற்கு பழி தீர்க்குமா ஈரான்

நாளுக்கு நாள் பதற்றம்

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

பற்றி எரியும் மத்திய கிழக்கு..! விரையும் போர்க்கப்பல்கள் - பழிக்கு பழி தீர்ப்போம் என சூளுரை | Middle East War Tension Iran Attack On Israel

பதற்றம் அதிகரித்துள்ளதால் லெபனானுக்கு பல விமான நிறுவனங்கள் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. சேவையைத் தொடரும் சில நிறுவனங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஆனாலும் "லெபனானை விட்டு வெளியேற வணிக ரீதியான போக்குவரத்து சேவைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன" என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

பலஸ்தீன கொடி போர்த்தப்பட்டு இஸ்மாயில் ஹனியே உடல் நல்லடக்கம்

பலஸ்தீன கொடி போர்த்தப்பட்டு இஸ்மாயில் ஹனியே உடல் நல்லடக்கம்

விரைவாக மோசமடையக் கூடும்

மத்திய கிழக்கில் நிலைமை "விரைவாக மோசமடையக் கூடும்" என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


இரண்டு பிரிட்டிஷ் இராணுவக் கப்பல்கள் ஏற்கனவே இப்பகுதியில் உள்ளன. பிரிட்டிஷ் விமானப்படையும் போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

இஸ்மாயில் ஹனியே படுகொலை: வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

இஸ்மாயில் ஹனியே படுகொலை: வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பற்றி எரியும் மத்திய கிழக்கு..! விரையும் போர்க்கப்பல்கள் - பழிக்கு பழி தீர்ப்போம் என சூளுரை | Middle East War Tension Iran Attack On Israel

அங்குள்ள இந்தியர்கள் அவசர உதவிக்கு தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்(+972-547520711, +972-543278392) அறிவிக்கப்பட்டுள்ளன. தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டெல் அவிவ் நகரில் செயல்படும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025