ஈரான் போருக்கு மத்தியில் யேமனில் இருந்து வந்த முதல் ஏவுகணை! அதிர்ச்சியில் இஸ்ரேலிய இராணுவம்
யேமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை அதிகாலையில் தெரிவித்துள்ளது.
நான்கு வாரங்களுக்கு முன்பு ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, யேமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய அதிகாரிகள் அடையாளம் காண்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.
ஈரானுக்கு ஆதரவு
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால், ஈரானுக்கு ஆதரவாகப் போரில் சேரத் தயாராக இருப்பதாக, ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்ததன் பின்னணியில் எந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

Image Credit: Anadolu Ajansı
இதேவேளை, ஹவுதி கிளச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து நடைபெறும் போரில் இணைவதற்கு தயாராக உள்ளதாக ஈரானும் அண்மையில் அறிவித்திருந்தது.
செங்கடல் தாக்குதல்கள்
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2023 ஒக்டோபர் முதல் செங்கடலில் இந்த கிளச்சிக்குழு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Image Credit: Al Jazeera
அதன்போது, குறித்த இயக்கம் இஸ்ரேல் தொடர்புடைய நூற்றுக்கணக்கான இலக்குகளை நோக்கி தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |