பௌத்த மத தலைவர்களின் பிழைகள் மீதும் சட்டம் பாய வேண்டும்! ஸ்ரீநேசன் கண்டனம்
மத தலைவர்கள் குற்றம் புரிந்தால் அவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்ற விசாரணைகள் மூலம் விசாரிக்கப்படுவதுக்கும் நிரூபிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இலங்கையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
பாரபட்சமான முன்னுரிமை
“பாரபட்சமான கட்டமைப்புகள் பாரபட்சமான சட்டங்கள் பாரபட்சமான முன்னுரிமைகள் வழங்கப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

பார்க்கின்றபோது இங்கு பிரிவினைகள் ஏற்படும் ஒரே சட்டம் ஒரே திட்டம் ஒரே பரிமாற்றம் இருக்குமாக இருந்தால், ஒரு சாராருக்கு ஒரு சட்டம் மறுசாராருக்கு இன்னுமொரு சட்டமாக இருக்கும்.
இவ்வாறு இருந்தால் இந்த நாட்டில் இரண்டு வகையான சட்டங்களும் இரண்டு வகையான தேசங்கள் இருப்பதும் இரண்டு வகையான மக்கள் பிரிந்து செல்வதற்குரிய வழியை கூறுவதாகவும் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
சட்டவாட்சி நடைபெறுகின்ற ஜனநாயக நாட்டிலே பல்லின மக்கள் வாழுகின்ற நாட்டிலேயே சகலருக்கும் சட்டம் பொதுவாக இருக்க வேண்டும்.
சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் சட்டப்படி இவர் தண்டிக்கப்படக்கூடாது சட்டத்தின் மூலமாக சமமான பாதுகாப்பு அனைவருக்கும் இருக்கின்றது என்று சொன்னால் மதகுருமார்கள் அரசியல் தலைவர்கள் பணம் படைத்தவர்கள் அதிகார சக்தி உள்ளவர்கள் பேதம் பார்த்து சட்டம் உங்கள் நடைமுறைப்படுத்தப்படும் ஆக இருந்தால் விசாரணை நடக்குமாக இருந்தால் அதைத்தான் சொல்லுவார்கள்.
பாரபட்சம் டிஸ்கிரிமினேஷன் என சொல்வார்கள். ஆகவே இடதுசார்புடைய அரசாங்கத்தில் முற்போக்காண சட்டங்கள் இருக்க வேண்டும், முற்போக்கான திட்டங்கள் இருக்கவேண்டும், மகத்துவக்கான அணுகுமுறைகள் இருக்க வேண்டும், என நாம் எதிர்பார்க்கின்றோம்.
மாறாக பௌத்த குருமார்களை விசாரிப்பதற்கு நீதிக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் சட்டவாட்சி கோட்பாடு உடைத்தெறியப்படும்.
இது பாரபட்சமான ஒரு நீதி பரிபாலனத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாக இருக்கும். எனவே இந்த விடயத்தை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 23 மணி நேரம் முன்