கனடாவிலிருந்து வந்த பணம்- யாழில் அரங்கேறிய கொடூரம்
Sri Lanka Police
Jaffna
Canada
By Sumithiran
இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் இன்று இவர்களை கைது செய்தனர்.
கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பணம்
சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா நாட்டிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
பனிப்புலம் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்தனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்