யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

Jaffna Indian Army Gun Shooting
By Sumithiran Mar 24, 2025 09:59 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் (jaffna)1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால்(indian army) கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று(23) சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடாத்தப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.

வீட்டு வளவில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்

உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டுவளவிலேயே அடக்கம் செய்துள்ளார்.

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! | Mother And Son Killed By Indian Army In Jaffna

பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

சிறிலங்கா படைத் தளபதிகள் மற்றும் கருணாவிற்கு பிரிட்டன் அதிரடி தடை..!

சிறிலங்கா படைத் தளபதிகள் மற்றும் கருணாவிற்கு பிரிட்டன் அதிரடி தடை..!

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்று அனுமதி

அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! | Mother And Son Killed By Indian Army In Jaffna

நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடாத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளன. 

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் அதிரடி கைது

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

22 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Toronto, Canada, பேத், Australia, Harrow, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

தேனி, India, Chennai, India

25 Mar, 2025
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023