பதவி விலகிய அஜித் பி பெரேரா: வெற்றிடத்திற்கு மரிக்கார்
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா விலகியுள்ளார்.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு நாடாளுமன்ற ஊறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மரிக்காரின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்மொழிந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான வழிமொழிந்தார்.
மேலதிக நடவடிக்கைகள்
அதனைதொடர்ந்து புதிய தலைவர் உரையாற்றுகையில், இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் நோக்கெல்லை மூன்று அமைச்சகங்களின் கீழ் சுமார் 50 நிறுவனங்களை உள்ளடக்கியது என்று கூறினார்.
குழுவின் நடவடிக்கைகளை தீவிரமாக நடத்துவதற்கு இரு கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், தேவைப்பட்டால் துணைக் குழுக்களை நியமிப்பதன் மூலம் குழு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தலைவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

