ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்: மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார்..!
மும்பை அணி சார்பில் 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரின் போது கணுக்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை எனவே, அவர் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் தொடரின் போது அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அவர் அந்த தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் விளையாடுவதே சந்தேகம் என கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா
2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் தொடக்கம் மே மாதமளவில் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் க்கான ஏலம் 19 ஆம் திகதி நடைபெற்றது.
அதற்கு முன்பாகவே ஹர்த்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடிக்கு வாங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி
2015 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 2022 நடைபெற்ற மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது மட்டுமன்றி கேப்டனாகவும் அறிவித்தது.
அப்போது பாண்டியா தன்னை அணியை விட்டு நீக்குமாறு கேட்டுக் கொண்டதால் தான் மும்பை இந்தியன்ஸ் அவரை நீக்கியது என கூறப்பட்டது.
அதன் பின் இரண்டு ஆண்டுகள் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பை வென்றதோடு 2023 ஐபிஎல் தொடரில் அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார்.
அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா இவ் வருட ஏலத்திற்கு முன்பாக வாங்கியதோடு அணியின் கேப்டனாகவும் அறிவித்தது.
ஆனால், ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையவில்லை என கூறப்படுகிறது.
அடுத்த கேப்டன் யார்
2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க முடியாத நிலையில், வேறொரு கேப்டனை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஹர்திக் பாண்டியவே அணியின் எதிர்காலம் என எண்ணியே பத்து ஆண்டுகள் தலைமையிலிருந்த கேப்டனான ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கியது.
எனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |