தாயாரை கொலை செய்தாலே வாழ முடியும் என கூறிய மகள்! அதிர்ச்சியை ஏற்படுத்திய வாக்குமூலம்

Jaffna University of Jaffna Sri Lanka Police Investigation Death
By Theepan Mar 23, 2026 02:22 AM GMT
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் இளமை காதல், போதைக்கலவையினால் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரிவுரையாளரின் மகளும், மருமகனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று காலையிலேயே அரியாலை - தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளார்.

மருமகனால் அடித்து கொல்லப்பட்ட யாழ். பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்பு!

மருமகனால் அடித்து கொல்லப்பட்ட யாழ். பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்பு!

கொள்ளையடிக்கப்பட்ட நகை

சடலத்தை வீசிவிட்டு, விரிவுரையாளரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகையை அடகு வைத்து பெற்ற பணத்தில், திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து, வீட்டுக்கு பால் காய்ச்சி, குடிபுகுந்து, தம்பதியாக வாழ ஆரம்பித்த மகளும், மருமகனும் 20ஆம் திகதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாயாரை கொலை செய்தாலே வாழ முடியும் என கூறிய மகள்! அதிர்ச்சியை ஏற்படுத்திய வாக்குமூலம் | Murdered Lecturer Jaffna Investigation

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 21ஆம் திகதி தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள்ளிருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம்- அராலியை பூர்வீக இடமாக கொண்ட விரிவுரையாளர் தயாளினி, கைதடியில் குடியிருந்து, சில வருடங்களின் முன்னர் சுண்டிக்குளி, பாண்டியன்தாழ்வு பகுதியில் காணி வாங்கி, வீடு கட்டி குடியிருந்துள்ளார்.

அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். மகளுக்கு 19 வயது.

அவருக்கும், நாயன்மார்க்கட்டு, இராஜேஸ்வரி வீதியை சேர்ந்த 21 வயதான இளைஞனுக்கும் பதிவுத் திருமணம் நடந்துள்ளது.

இந்த இளைஞன் போதைக்கு அடிமையானவர். இந்த பதிவு திருமணம், கடந்த வருடம் நடந்தது. அப்போது விரிவுரையாளரின் மகளுக்கு 18 வயது.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு செலவிடப்படும் மொத்த தொகை: வெளியான தகவல்

வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு செலவிடப்படும் மொத்த தொகை: வெளியான தகவல்

பதிவுத்திருமணம்

இந்த ஜோடி காதல் வசப்பட்டிருந்த சமயத்தில், போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பாக 2,3 தடவைகள் அந்த இளைஞன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயாரை கொலை செய்தாலே வாழ முடியும் என கூறிய மகள்! அதிர்ச்சியை ஏற்படுத்திய வாக்குமூலம் | Murdered Lecturer Jaffna Investigation

போதை இளைஞனுடன் மகளை திருமணம் செய்து வைக்கமாட்டேன் என தாயார் உறுதியாக கூறிவிட்டதையடுத்து, மகள் வீட்டுக்கு தெரியாமல் காதலனுடன் ஓடிச்சென்று, பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இதனால் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. கணவனால் துன்புறுத்தப்பட்டு, அவரை விட்டுவிட்டு தாயாரின் வீட்டுக்கு மகள் அடிக்கடி வந்துள்ளார்.

மருமகன் குறிப்பிடும்படியாக எந்த வேலையும் செய்யாமல், போதைக்கு அடிமையாக, மகளையும் துன்புறுத்தி வந்த நிலைமையில், மகள் தரப்பில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. விவாகரத்து வழக்கு நடந்து வந்தாலும், அண்மைக்காலமாக, சமூக வலைதளம் மூலம் விரிவுரையாளரின் மகளுடன் தான் தகவல் பரிமாறி வருவதாக கைதான இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தது தாயாரின் அறிவுரையின் பேரிலேயே என்றும், மகளுக்கு தன் மீதான கோபம் தீர்ந்து விட்டது என்பதையும் உரையாடலில் அறிந்து கொண்டதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

விரிவுரையாளர் வீட்டில் நடந்தது என்ன?

விவகாரத்து கோரிய மனைவியுடனான உரையாடலில், இருவரும் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக இளைஞன் கூறுகிறார்.

விவகாரத்து வழக்கின் கடந்த தவணையில், இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அடுத்த தவணை விரைவில் வரவுள்ள நிலையில், அதற்கிடையில் மனைவியை சமரசப்படுத்தி, விவாகரத்து வழக்கை, இல்லாமலாக்க இளைஞன் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி இரவு விரிவுரையாளரின் வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த இளைஞன், வீட்டு கூரை பிரித்து இறங்கி, சீற்றுக்குள் ஒளிந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழையவுள்ள விவகாரத்தை அவர் காதலியிடம் சொல்லவில்லை.

எரிபொருள் விலையேற்றத்தால் விவசாயத் துறைக்கு பேரிடி: முடங்கும் காய்கறி வர்த்தகம்

எரிபொருள் விலையேற்றத்தால் விவசாயத் துறைக்கு பேரிடி: முடங்கும் காய்கறி வர்த்தகம்

போதைக்கு அடிமை

 நள்ளிரவு 12.30 அளவில் வீட்டுக்குள் இறங்கி, விரிவுரையாளரின் மகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். மகளை தட்டியெழுப்பி, தாம் சேர்ந்து வாழலாம் என கேட்டுள்ளார்.

தாயாரை கொலை செய்தாலே வாழ முடியும் என கூறிய மகள்! அதிர்ச்சியை ஏற்படுத்திய வாக்குமூலம் | Murdered Lecturer Jaffna Investigation

அதற்கு சேர்ந்து வாழலாம் என அந்த பெண் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் தாயாரை கொலை செய்தாலே வாழ முடியுமென்றும் கூறியதாக இளைஞன் தற்போது காவல்துறையிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

அந்த பெண்ணின் யோசனையின்படியே, விரிவுரையாளரை கொல்ல முடிவெடுத்ததாகவும் கைதான இளைஞன் தெரிவித்துள்ளார்.

18ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் விரிவுரையாளர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்ததாகவும், தனது தாயாரின் கால்களை மகள் அழுத்திப் பிடித்திருக்க, இளைஞன் கழுத்தை நெரித்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலையின் பின்னர், வீட்டிலிருந்த சிசிரிவி கமராவின் டிவிஆர் இருந்த அறையை திறந்து, டிவிஆரை எடுத்து சென்றுள்ளனர்.

அதை திருகோணமலை செல்லும் வழியில் நீர்நிலையொன்றில் எறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

டிவிஆர் இருந்த அறையை திறப்பை மகளே எடுத்து தந்ததாகவும், தாயாரின் நகைகள் இருந்த அறை திறப்பையும் தந்து, நகைகளை எடுக்கும்படி சொன்னதாகவும் இளைஞன் தெரிவித்துள்ளார்.

சடலத்தை புதைக்க முயற்சி

கொலை செய்த பின்னர், சடலத்தை படுக்கை விரிப்பினால் சுற்றி, விரிவுரையாளரின் காருக்குள் வைத்துள்ளனர். இருவரும் இணைந்தே சடலத்தை காருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், தான் வந்த மோட்டார் சைக்கிளில் விரிவுரையாளரின் மகளையும் ஏற்றிக்கொண்டு, தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, வாடகை வாகனத்தில், அந்த பெண்ணுடன், விரிவுரையாளரின் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.

விரிவுரையாளரின் சடலத்தை புதைப்பதற்காக மண்வெட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டு, காரில் புறப்பட்டுள்ளனர். மண்வெட்டியினால் கிடங்கு வெட்ட முனைந்த போது, மண்வெட்டி உடைந்ததால், அந்த முயற்சியை கைவிட்டு, தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் சடலத்தை வீசிவிட்டு சென்றதாக இளைஞன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், கொலையில் தனது பங்கை மகள் இதுவரை மறுத்து வருவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலம் அடக்கம்!

யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலம் அடக்கம்!

சிக்கியது எப்படி?

விரிவுரையாளரான தனது தாயாரையும், தங்கையையும் கடத்திச் சென்றுவிட்டதாக விரிவுரையாளரின் மகன் காவல்துறையில் முறையிட்டிருந்தார்.

காவல்துறையினர் இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, சில தொழில்நுட்ப வசதிகளால் - தம்பதிகள் சிக்கியுள்ளனர்.

அவர்கள் சிக்குவதற்கான தொழில்நுட்ப தகவல்களை விரிவுரையாளரின் மகனே கொடுத்துதவியுள்ளார். இந்த ஜோடி தப்பிச்செல்லும் போது, விரிவுரையாளரின் ATM அட்டையை பயன்படுத்தி, கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் பணம் பெற்றுள்ளனர்.

இதற்கான குறுந்தகவல் விரிவுரையாளரின் தொலைபேசிக்கு சென்றது. அத்துடன், திருகோணமலையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கியூ.ஆர் குறியீட்டுக்கு எரிபொருளை பெற்றுள்ளனர்.

இதற்கான குறுந்தகவலும் தொலைபேசிக்கு சென்றது. இது தவிர, கொலையின் பின்னர் தனது தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்த மகள், திருகோமணலையில் வீடொன்றை வாடகைக்கு பெற்று, குடிபுகுந்த பின்னர், தனது தொலைபேசியை இயக்கியுள்ளார்.

இதன்போது, அவரது புவியியல் இருப்பிடத்தை சகோதரன் அறிந்து கொண்டார். இந்த தகவல்களின் அடிப்படையின் காவல்துறையினர்  துரிதமாக செயற்பட்டு, திருகோணமலையில் வைத்து இந்த ஜோடியை கைதுசெய்துள்ளனர்..

விரிவுரையாளரை கொன்ற பின்னர், அந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட நகையை அடகு வைத்து பெற்ற பணத்திலேயே, திருகோணமலையில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். 

திருகோணமலையிலிருந்து இந்த ஜோடி யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, சடலமாக வீசப்பட்டது தெரிய வந்தது.

இளைஞனின் தகவலின் அடிப்படையில் தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026