காரைநகர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு
யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
இந்தநிலையில் சுயேட்சைக்குழு, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டிருந்தனர்.
புதிய தலைவர்
அதன் அடிப்படையில் முதலாவது 16 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், முன்னதாக தவிசாளராக பதவி வகித்த சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராசா பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து, அடுத்த 16 மாதங்களுக்கான தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் கட்சியினால் நியமிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, அதே கட்சியை சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரும் போட்டியிட்டு இருவருக்கும் சம வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இந்தநிலையில் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் திருவுள சீட்டு மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |