தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார்

By Thulsi Jan 26, 2025 03:06 AM GMT
Report

அரசு கொண்டு வர உள்ள ஒற்றையாட்சி அரசமைப்பை நாங்கள் முதற்கட்டமாக எதிர்ப்பதற்கு எங்களிடத்தில் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும் அதற்கான நடவடிக் கைகளையே முன்னெடுக்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு விவகாரத்தில் தம்மிடமுள்ள அறுதிப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு தாம் விரும்பியதை எங்களிடம் திணிக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை யாழ். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் தேசியக் கட்சிகளுக்கு அமோக ஆணை

அவர் மேலும் தெரிவிக்கையில், நானே சிவஞானம் அண்ணனிடம் சந்திப்புக்கு நேரம் கேட்டிருந்தேன். அதற்குக் காரணம் ஏற்கனவே பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.  நாடாளுமன்றத்தில் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்றார்கள்.  எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை.

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார் | New Constitution Discussion Gajendrakumar

அப்படிப்பட்ட நிலையில் அரசு தமக்குத் தான் பெரும்பான்மை இருப்பதாகவும் மக்கள் தங்களுக்கு   ஆணையை வழங்கியுள்ளதாகவும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி திட்டமிட்டக் கருத்துருவாக்கத்தை செய்கின்றனர்.  

யதார்த்தம் அப்படியல்ல. மாறாக இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு அமோக ஆணையை வழங்கி இருக்கிறார்கள்.

அறுதிப் பெரும்பான்மையைக் காட்டவேண்டும்

அரசு கொண்டுவர யோசிக்கின்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாங்கள் முதற் கட்டமாக எதிர்ப்பதற்கு எங்களுக்கிடையில் அறுதிப் பெரும்பான்மையைக் காட்டவேண்டும்.  தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் இருக்கின்றன.

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார் | New Constitution Discussion Gajendrakumar

19 பேர் என்றால் இன் னும் இரண்டாக அதிகரித்தால் மட்டுமே அறுதிப் பெரும்பான்மையை உறுதிப் படுத்தலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன் னணிக்கு ஒன்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒன்று என அந்த மூன்று தரப்புகளும் ஒரு புள்ளியில் சந்தித் தால் அறுதிப்பெரும்பான்மையாகக்   காட்டலாம்.  

தமிழ் மக்களுடைய ஆணை பெற்ற தரப்புகள் எப்படி நாங்கள் எங்கள் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஒரு புள்ளி சந்திக்கின்றது என்ற வகை யில் பேசுகின்றௌம்.

அந்தக் கோணத்தில் மூன்று தரப்புகளும் ஒன்றாக சேர வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு யோசனை இருந்தது.  நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த கையோடு தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி சம்பந்தமாகக் கேள்வி வந்தது.

முடிவெடுக்கும் அதிகாரம் தலைமைப் பதவி

நாடாளுமன்றக் குழு அந்தக்  கட்சியால் நியமிக்கப்பட்ட வகையில் நாடாளுமனறக் குழுத் தலைவர் என்ற வகையில் சிறீதரனோடு தொடர்பு கொண்டேன்.

ஆனால்  அந்த அமைப்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைமைப் பதவியில் உள்ள சிவஞானம் அண்ணைக்கும் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் வழங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார் | New Constitution Discussion Gajendrakumar

அந்த இடத்தில் சிவஞானம் அண்ணன் ஒரு பேட்டியில் உத்தியோகபூர்வமாக தலைவர் அல்லது செயலாள ருக்கு அழைப்பிதழ் வரவில்லை. அழைப்பு வந்தால் பரிசீலிக்கத் தயார் என்று சொல்லப்பட்ட இடத்தில் நாங்கள் அவருடன் நேரத்தைக் கேட்டு இன்று இந்த விட யத்தை அவரிடம் பகிர்ந்து இருக்கின்றௌம்.

தங்கள் கட்சியிடம் விடயத்தைப் பேசி அடுத்த கட்டமாக ஒரு முடிவை அறிவிப்பதாகச் சிவஞானம் அண்ணன் சொல்லி இருக்கின்றார். நாங்கள் அந்தச் சந்திப்பை விரைவாக மேற்கொள்கின்ற அவசியத்தை அவருக்கு தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

தமிழரசுக் கட்சி நல்ல முடிவை அறிவிக்கும் 

அந்தவகையில் எதிர்பார்ப்புடன் தமிழரசுக் கட்சி நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றௌம். அரசினுடைய போக்கை நாடாளுமன்றத்தில் நடந்து கொள்கின்ற விதத்தைப் பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கும் கஜேந்திரகுமார் | New Constitution Discussion Gajendrakumar

மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வைத்துக்கொண்டு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளுகின் றார்கள்.

எண்ணிக்கையை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும்போது நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறி சில விடயங்களை அரச தரப்பினர் செய்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் என்ற வகையில் மக்களை வழிநடத்தும் பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது. அதில் நாங்கள் தவறக்கூடாது. அந்த அடிப்படையில் அவசரமாக எங்களிடத்திலேயே நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் காட்டி தவறான விடயத்தைத் தடுப்பதற்கான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்." - என்றார்.

ReeCha
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025