யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதி போட்டியின்றித் தெரிவு
Sri Lankan Tamils
Jaffna
University of Jaffna
By Theepan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜனின் பதவிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பீடச்சபைக் கூட்டம் நேற்று(26) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் செயற்படும் வகையில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி