பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்
Srilanka
vaccine
Booster
Sinopharm
By MKkamshan
சினோபார்ம் தடுப்பூசி முழுமையாகச் செலுத்திக் கொண்ட நபர்கள் 6 மாதங்கள் கடப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது சிறந்தது என வைத்திய நிபுணர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 6 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசியின் வீரியம் 3 மாதங்களுக்குப் பின்னர் குறைவதாக தகவல் கிடைத்துள்ளது என இலங்கை விஷேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விஷேட வைத்தியர் ரஜீவ்த சில்வா தெரிவித்துள்ளார்.