யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நாளை பதவியேற்பார்
Jaffna
Sri Lanka Cabinet
By Vanan
யாழ்ப்பாண மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (17) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளை (18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார் .
அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று (16) அமைச்சரவை வழங்கியுள்ளது.
இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
வரவேற்பு நிகழ்வு
5ம் ஆண்டு நினைவஞ்சலி