எவருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது : மைத்திரி வெளிப்படை
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் 225 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது எனவும், பொதுத் தேர்தலில் பலமான எதிர்க்கட்சியை உருவாக்க மக்கள் வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை(polonnaruwa) புதிய நகரில் இன்று(06) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,
அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது
“எங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றத்தில் 225 அறுதிப்பெரும்பான்மையை எவராலும் பெற முடியாது.
எனவே இந்த நாடாளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சியை உருவாக்க படித்த அறிவார்ந்த குழுவை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
பலமான எதிர்க்கட்சி
நாடாளுமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி இருந்தால் தான் அரசின் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியும்.
எனவே, அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் ஆதரவு அளித்து, நாட்டு மக்களுக்கு எதிராக அரசு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து எதிர்க்கட்சிகளின் வேலையைச் செய்ய மக்களிடம் வாக்கு கேட்கிறோம் என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |