ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..
2026 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு இன்று ஒஸ்லோவில் நவனீதம் பிள்ளை எனப்படும் நவி பிள்ளைக்கு அறிவிக்கபட்டபோது அது ஒருவகையில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக நிற்பவர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது.
தமிழர் அல்லது தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட ஒருவர் நோபல் பரிசு பெறுவது இது முதல் தடவை அல்ல என்றாலும் நவநீதம்பிள்ளைக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டிருப்பது, வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்.
நவி பிள்ளை சர்வதேச சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி பூகோள சட்ட ஒழுங்குக்கு வழிவகுக்கும் விதிவிலக்கான தைரியத்துடன் உறுதியான தார்மீக வழிகாட்டியான செயற்பட்டதாக நோபல் குழு இன்று குறிப்பிட்டுள்ளமை தமிழர்களுக்கும் பெருமை தென்னாப்பிரிக்காவில் பிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான நவி பிள்ளை 2008–2014 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியபோது இலங்கையின் இறுதிக்கட்ட போர் தொடர்பாக அவர் எடுத்த ஜெனிவா நகர்வுகளால் ராஜபக்சக்கள் அன்று எவ்வளவோ சீற்றப்பட்டடிருந்தனர்.
ஒரு விடுதலைப்புலி ஆதரவாளர்
அதிலும் இன்று அனுர அரசாங்கம் எங்கே தன்னை தூக்கி உள்ளே போடுமோ என பம்மிபதுங்கும் கோட்டாபாய அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது அவர், நவனீதம் பிள்ளையை ஒரு விடுதலைப்புலி ஆதரவாளர் என்றார்.

தனது தமிழ்ப்பூர்வீகத்தைக் காரணமகாட்டி, சில சிறிலங்கா ஊடகங்களும் ராஜபக்சக்களின் அமைச்சர்களும் தன்னை ஐ.நா.வில் உள்ள தமிழ்ப் புலிப்பெண் என அவமதித்த விடயத்தை நவனிதம் பிள்ளை 2013 ஓகஸ்ட் 31 திகதி உரையில் தெரிவித்ததுடக் ராஜபச்சக்கனை அன்று மறைமுகமாக கடுமையாகக் கண்டித்தார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போர், தமிழ்ப் பொதுமக்களின் உயிரிழப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், போருக்குப் பிந்தைய இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் ராஜபச்சகளின் அரசாங்கத்தை நேரடியாக விமர்சித்தார்.
இதனால் ராஜ அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையே கடுமையான அரசியல் மற்றும் இராஜதந்திர முரண்பாடுகள் ஏற்பட்டன.
ஒருகட்டத்தில் மேர்வின் சில்வா போன்ற அரசியல் குண்டர்கள் நவிபிள்ளையை இரண்டாம் தாரமாக மணம் முடிக்க தயாரென வக்கிர கொச்சையில் முழங்கிய விடயமும் நவிபிள்ளைக்கு சிங்கள அலங்காக மணவாட்டி வேடம் போட்ட படங்கள் எல்லாம் பகிரங்கப்பட்டன.
வரலாற்றின் சுழற்சி
ஆனால் இந்த வசவுகளை எல்லாம் எதிர்கொண்டு அவர் 2013 ஓகஸறில் இலங்கைக்கு ஏழு நாள் பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சொன்னார் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அறிக்கையிட்டார்.
போருக்குப் பின்னரும் வடக்கு, கிழக்கில் நிலவும் அதித இராணுவப் பிரசன்னம் மற்றும் மனித உரிமைச் சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றார் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐ.நா. அதிகாரிகளிடம் பேசுபவர்கள் அச்சுறுத்தப்படக்கூடாது என குறிப்பிட்டார்.
அதனால் ஐ.நா புலி வன்னியில் அலறுவதாக ராஜபச்ச அல்லக்ககைகள் அலறினர். அவர்களின் கருத்தியல் படி இன்று அவருக்கு கிட்டிய நோபல் விருதை நோக்கினால் ஐ.நா.வில் இருந்த தமிழ்ப் புலிப்பெண்ணுக்கு உலகவிருது கிட்டியுள்ளது.
அன்று இந்த புலிமுழக்கத்தை அவரை நோக்கிய முழங்கியர்வர்களின் குடும்பத்தில் சிராந்தி பெண்ணுக்கு இப்போது ஊழலில் தடுப்புகாவல் கிட்டியுள்ளது. இதுதான் வரலாற்றின் சுழற்சி.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |