உக்ரைனுக்கு எதிரான போரில் கொத்து கொத்தாக மடியும் வடகொரிய வீரர்கள்
உக்ரைனுக்கு(ukraine) எதிரான போரில் 300 வடகொரிய(north korea) வீரர்கள் பலியாகியும், 2,700 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தென்கொரிய(south korea) நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியாங்-வீ அன் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசும்போது,வடகொரிய வீரர்களின் மரணம் பற்றிய இந்த தகவலை குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கூறும்போது,
குர்ஸ்க் பகுதி வரை நீடிக்கப்பட்டு உள்ள வடகொரிய வீரர்கள்
ரஷ்யாவுக்கு(russia) ஆதரவாக குவிக்கப்பட்ட வடகொரிய வீரர்கள் குர்ஸ்க் பகுதி வரை நீடிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
என்.ஐ.எஸ். துறையின் ஆய்வின்படி, நவீன போர் கருவிகளை பற்றிய புரிதல் வடகொரிய வீரர்களுக்கு இல்லை. போதிய அளவுக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லாத அவர்களை ரஷ்யா பயன்படுத்தி கொள்கிறது.
உக்ரைனால் சிறை பிடிக்கப்பட்ட வடகொரிய வீரர்கள்
அந்த வகையில், வீரர்கள் இடையே அதிக அளவில் காயங்களும், மரணங்களும் ஏற்படுகின்றன என தெரிய வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, ரஷ்ய போரில் 2 வடகொரிய வீரர்களை உக்ரைன் சிறை பிடித்து வைத்துள்ளது. நாங்கள் அவர்களை விடுவிக்க தயாராக இருக்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். எனினும், அவர்கள் இருவருக்கு பதிலாக, உக்ரைனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |