தடுப்பூசிக்கான அட்டை அவசியமில்லை - இராஜாங்க அமைச்சர்
vaccine
sri lanka
people
By Shalini
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டாயம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டுமென்ற தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லையென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்த நடைமுறை சாத்தியப்படலாம், ஆனால் தற்போது இது சாத்தியமான விடயமல்ல என்றும் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
பரபரப்பாக இயங்கும் இந்த சேவையின்போது அனைவரிடமும் தடுப்பூசிக்கான சான்றிதழை பரிசோதனை செய்வதென்பது இயலாத காரியமென்றும் அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி