இலங்கையில் தற்போது பிக்பொக்கெட் அரசாங்கம் : நாமல் கண்டுபிடிப்பு
"இப்போது நம்மிடம் ஒரு பிக்பொக்கெட் அரசாங்கம் உள்ளது," என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
"அரசாங்கம் பட்டப்பகலில் நிதி அமைச்சகத்தைக் கொள்ளையடித்துள்ளது," என்றும் ராஜபக்ச கூறினார். கொழும்பில் ஊடகங்களுக்கு அறிக்கை அளித்தபோது நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.
"திருடன் என்று கூறிக்கொண்டு திரியும் பிக்பொக்கெட் திருடன் சொல்வதைக் கேட்டு, அப்பாவி மக்கள் அவனைத் துரத்திச் செல்கிறார்கள்.
பிக்பொக்கெட் திருடனைப்போலவே அரசாங்கமும்
பிக்பொக்கெட் திருடன் உடனடியாகப் பைகளைத் திருடிவிட்டு நகர்ந்துவிடுகிறான். அரசாங்கமும் அப்படித்தான்.

அவர் பதவியேற்ற நாள் முதல், ஒருபுறம் முந்நூற்று இருபத்து மூன்று கொள்கலன்கள் கடத்தப்பட்டுள்ளன. துறைமுகத்திலிருந்து போதைப்பொருள் கொள்கலன்கள் கடத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், நிலக்கரி கடத்தப்படுகிறது. இப்போது நிதி அமைச்சகத்தின் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்