போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை பழிவாங்கும் NPP அரசு : மொட்டுக்கட்சி குற்றச்சாட்டு

SLPP Shiranthi Rajapaksa NPP Government
By Independent Writer Oct 15, 2026 11:27 AM GMT
Report

இலங்கையின் போரை முடிவுக்குக் கொண்டுவந்து சேவை செய்த ஒரு தலைவருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) கொள்கைகளைக் கொண்ட சில முக்கிய குழுக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகும் பசில் ராஜபக்ச

மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகும் பசில் ராஜபக்ச

வைத்தியசாலையில் சிகிச்சை

அவர் மேலும் தெரிவித்ததாவது, "முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ஓய்வு காலத்தில் மனைவியின் பராமரிப்பு மிகவும் அவசியமான ஒரு சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் ஷிரந்தி ராஜபக்சவை சிறையிலடைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை பழிவாங்கும் NPP அரசு : மொட்டுக்கட்சி குற்றச்சாட்டு | Npp Gov Takes Revenge On Mahinda End To The Sl War

நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவந்து சேவை செய்த ஒரு தலைவருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

ஷிரந்தி ராஜபக்ச போலி நோயைக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் எனப் பொறுப்புள்ள ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் பெறப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி, அவருக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் உயிரோடு அரசாங்கம் விளையாடக் கூடாது. மருத்துவ அறிக்கைகளை சவாலுக்கு உட்படுத்துவது நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

பசில் ராஜபக்சவிற்கு எதிராக INTERPOL சிவப்பு அறிவிப்பு : சிஐடியின் அடுத்த கட்ட நகர்வு

பசில் ராஜபக்சவிற்கு எதிராக INTERPOL சிவப்பு அறிவிப்பு : சிஐடியின் அடுத்த கட்ட நகர்வு

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு

அத்துடன், கலகொட அத்தே ஞானசார தேரரை 'இனவாதி' என முத்திரை குத்த வேண்டாம். அவருக்கு இந்த தீவிரவாத ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கியதே பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் தான். சிறையில் இருக்கும் ஞானசார தேரர், நாட்டின் எதிர்கால பாதுகாப்பு குறித்த கவலையையே வெளிப்படுத்தியுள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை பழிவாங்கும் NPP அரசு : மொட்டுக்கட்சி குற்றச்சாட்டு | Npp Gov Takes Revenge On Mahinda End To The Sl War 

தற்போதைய அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கையுடைய குழுக்களுடன் இணைந்து செயற்படுவதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்போடு விளையாடுகின்றது.

தூதுவனைக் கொல்வதற்குப் பதிலாக அவர் கொண்டு வரும் செய்தியைக் கவனியுங்கள். ஞானசார தேரருக்கு எதிராக விரல் நீட்டுவதற்கு முன், அவர் கூறுவதில் உள்ள உண்மையைக் கண்டறியுங்கள்.

எனவே, சட்டப்பூர்வமான வழிமுறைகளின் கீழ் ஜனாதிபதி அவர்கள் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்தார்.

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026