இலங்கையில் ஆபத்தாக மாறும் முதியோர் இல்லம்! பரிதாபமாக உயிரிழந்த 91 வயது மூதாட்டி
corona
death
people
By Shalini
அரநாயக்க - மில்லனிய,கெடகொட பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் திடீரென உயிரிழந்த 91 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஏனையோருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் குறித்த முதியோர் இல்லத்தில் உள்ள இரண்டு ஊழியர்கள் மற்றும் நான்கு பெரியவர்களுக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் கொரோனா சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்களின் வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி