பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை : சந்தேகநபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
நுவரெலியாவில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
அதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நேற்று (16) சிறைச்சாலை அதிகாரிகளினால் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள்
நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் இந்த வழக்கு பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, சந்தேகநபருக்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குண்டசாலை பிரதேச சபையின் சாரதியும், மெனிக்ஹின்ன காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான காவல்துறை பரிசோதகரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |