3 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த விலை - திறக்கும் ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளன.
அதன்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75 அமெரிக்க டொலராகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்
குறுகிய காலத்தில் ஹோர்முஸ் வழியாக மேலும் பல கப்பல்கள் எவ்வாறு செல்லலாம் என்பது குறித்து ஓமான் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறையில் செய்தியாளர்களிடம் ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் விநியோக அபாயங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |