தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் துயரம்
கிளிநொச்சியில் (Kilinochchi) தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் இன்று (25) 12 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையினை குறித்த நபர் கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தை
இந்த விபத்தில் 28 வயதுடைய பொன்னழகு அனுசன்ராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த
அதிசொகுசு தொடருந்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் தொடருந்து சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இதேவேளை விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை முறையாக இயங்குவது இல்லை எனவும் இதனால் பல ஆபத்துக்கள் ஏற்படுவதாகவும பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



