புறக்கோட்டையில் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Accident
By Raghav
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை (12.08.2025) இடம்பெற்றுள்ளது.
145 ஆம் இலக்க பேருந்து மார்க்கத்தில், புறக்கோட்டை பழைய மீன் சந்தைக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
பேருந்து ஓட்டுநர் நித்திரை கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த பேருந்து விபத்தின் காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்