ஒப்பரேஷன் துவாரகா ஒரு புலனாய்வுச் சதி: ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர்(காணொளி)
ஒப்பரேஷன் துவாரகா தொடர்பாக உலக தமிழர்கள் மத்தியில் இருந்த குழப்ப நிலையை தீர்ப்பதற்கான பல தேடல்களை கடந்த சில நாட்களாக உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
துவராகா விவகாரத்தில் செயற்பட்ட குழுவில் அங்கம் வகித்து, சிறிது காலம் அக்குழுவில் பயணித்த சிலர் முதற்கொண்டு குறிப்பிட்ட அந்த பெண் துவாரகாதானென்று மற்றைய போராளிகளுக்கு அடையாளப்படுத்திய சிலரது ஒப்புதல் வாக்குமூலங்களையும் இந்நிகழ்ச்சியில் பதிவிட்டிருக்கின்றோம்.
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுக்கமான சண்டைகள் பற்றியும், அதிலிருந்து தலைவரும் அவரது குடும்பத்தினரும் தப்பித்திருக்க வாய்ப்புக்கள் இருந்ததா? என்பதைபற்றிய புரிதலை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு பலமுனை தளபதிகளின் சாட்சியங்களையும் வெளியிட்டிருந்தோம்.
இதன் தொடர்ச்சியாக, தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்பாதுகாவலர் அணியில் நீண்டகாலம் செயற்பட்ட இளங்குட்டுவன் என்ற போராளி இந்த விடயங்கள் தொடர்பில் எம்மிடம் பரிமாறிய விடயங்களை சுமந்து வருகின்றது, இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில