பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியாவின் பதிலடி : கசிந்த ஐந்து தகவல்கள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் (Iandia) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என அடையாளப்படுத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் 5 புதிய தகவல்கள் கசிந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் (Jammu & Kashmir) பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக கடந்த 07ஆம் திகதி இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த நிலையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் 5 புதிய தகவல்கள் கசிந்துள்ளது.
வெளியான தகவல்களில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் அளவு மற்றும் தீவிரம் மற்றும் பாகிஸ்தான் (Pakistan) இராணுவத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
01.இரண்டு பெண் கர்னல்களின் முதல் போர்ப் பங்களிப்பு
முதல் முறையாக நேரடிப் போரில் களமிறங்கிய இரண்டு பெண் கர்னல்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்துள்ளது.
மே 7-10 திகதிகளில் நடந்த தீவிர மோதல்களின் போது பதான்கோட் மற்றும் சூரத்கரில் வான் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய அவர்கள், இராணுவத் தளங்கள், நகரங்கள் மற்றும் மதத் தளங்கள் மீது பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.
800 பேர் கொண்ட அவர்களின் பிரிவுகளில் ஒரே பெண் அதிகாரிகளான இரு பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பொறுப்பேற்றனர்.
02.பாகிஸ்தானின் பதிலடி 8 மணி நேரம் மட்டுமே நீடித்தது
48 மணி நேரத்திற்குள் இந்திய விமானத் தளங்களை அழிப்பதாக சபதம் செய்த பாகிஸ்தான் மே 10 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு ஆபரேஷன் பன்யான் அல்-மர்சூஸைத் தொடங்கியது.
ஆனால், இந்திய விமானப்படையின் நான்கு துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களைச் சேதப்படுத்தியதை அடுத்து, அதே நாள் காலை 9:30 மணிக்கு அந்த நடவடிக்கை தோல்வியடைந்தது.
இதனால், இஸ்லாமாபாத் அவசரமாக அமெரிக்காவை ஒரு போர் நிறுத்தத்திற்கு அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நூர் கான் விமானப்படைத் தளம்
03.இந்தியாவின் வலுவான தாக்குதல்கள்
இந்தியப் படைகள் லாகூரில் பாகிஸ்தானின் விலைமதிப்பற்ற சீனாவில் தயாரிக்கப்பட்ட LY-80 வான் பாதுகாப்பு அமைப்பை HARPY kamikaze ட்ரோன் மூலம் அழித்துவிட்டன.
கராச்சியில் உள்ள HQ-9 அமைப்பை (சீனாவின் S-300 க்கு சமமான) ஏவுகணைத் தாக்குதலைப் பயன்படுத்தி அழித்தது.
04.பாகிஸ்தானுக்கு மரண பயம் காட்டிய ரஃபேலும் சுகோயும்
ஒருங்கிணைந்த தாக்குதல்களில் ரஃபேல் விமானங்களில் இருந்து SCALP ஏவுகணைகள் மற்றும் Su-30MKI களில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளையும் இந்திய விமானப்படை பயன்படுத்தியது.
முதல் தாக்குதலே ராவல்பிண்டின் சக்லாலாவில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தில் உள்ள வடக்கு விமானப்படை கட்டளை கட்டுப்பாட்டு மையத்தைத் தகர்த்தது, அதைத் தொடர்ந்து ஜகோபாபாத் மற்றும் போலாரி விமானப்படைத் தளங்களைத் தாக்கி, சில மணி நேரங்களுக்குள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை மொத்தமாக அலற வைத்தது.
மிகப்பெரிய தாக்குதல்
05.பயங்கரவாதிகள் 170 பேர்கள் கொல்லப்பட்டனர்
மே 7 அன்று இந்தியா நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் 170க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, இதில் பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத கோட்டையான பஹாவல்பூரில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.
இந்தியப் பெண் போர் விமானிகளின் தீவிர பங்கேற்புடன் இந்த நடவடிக்கை ஒரு வரலாற்று மைல்கல்லாக மாறியது.
மொத்தத்தில், இந்தியத் தாக்குதல்களில் 42 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் இந்தியா தரப்பில் ஏழு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிவலையை ஏற்படுத்திய தீர்ப்பு 13 நிமிடங்கள் முன்
