புரட்டிப் போட்ட பேரிடர்: அரசின் மீது வழக்குத் தொடரும் எதிர்க்கட்சி...! சாடும் சரத் பொன்சேகா
அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரும் எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடரவுள்ளதாக எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அனர்த்தம் ஏற்படக்கூடும்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சி காலங்களின் போதும், இது போன்ற நிலைமை ஏற்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இது போன்ற அனர்த்தம் ஏற்படக்கூடும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும் கூட இது போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்கள் குறைவாக இருப்பதால் யாராலும் இந்த நிலைமையை தடுத்திருக்க முடியாது எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |