டெங்கு ஒழிப்பில் மக்களும் இணையலாம் : வாட்ஸ்அப் மூலம் புகைப்படம் அனுப்பும் ‘Citizen Science’ திட்டம்
டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இலங்கையில் ‘Citizen Science’ திட்டம் தொடக்கம் இலங்கையில் டெங்கு ஒழிப்பு முயற்சிகளில் பொதுமக்களையும் பாடசாலை மாணவர்களையும் ஈடுபடுத்தும் நோக்கில் ‘Citizen Science’ விழிப்புணர்வுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சின்னத்தம்பி நோபிள் சுரேந்திரனின் மேற்பார்வையில், மீரா கேசவன் இத்திட்டத்துக்குத் தலைமை தாங்குகிறார்.
இந்தத் திட்டம் யாழ்ப்பாணப் பூச்சியியல் சங்கம் (Jaffna Entomological Society – JES) மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் (Center for Research in Entomology, University of Jaffna – CRE) ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.
திறந்த வெளிகளிலோ கொள்கலன்களிலோ தேங்கியுள்ள நீரைப் படம் அல்லது வீடியோ எடுத்து WhatsApp வழியாக அனுப்புமாறு திட்டக் குழுவினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேங்கிய நீர் சுத்தமாகவோ அசுத்தமாகவோ இருந்தாலும் அதைப் பதிவு செய்து அனுப்பலாம். டெங்குவைப் பரப்பும் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் கண்டறிய இந்தப் பதிவுகள் உதவும்.
பங்கேற்க விரும்புவோர் தெளிவான படம் அல்லது வீடியோவை எடுத்து, +94 77 822 0926 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பலாம்.
இருப்பிடத்தைப் பகிருமாறு பதில் செய்தி வந்ததும், அதிலுள்ள பொத்தானைத் தொட்டுத் தமது தற்போதைய இருப்பிடத்தை அனுப்ப வேண்டும். இருப்பிடம் கிடைத்ததும் WhatsApp வழியாக உறுதிப்படுத்தல் செய்தி வரும்.
இதற்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரமே ஆகும் என்று திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் அல்லது வீடியோ எடுத்த பிறகு, பாதுகாப்பாக அகற்றக்கூடிய தேங்கிய நீரை அகற்றுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்புவோருக்கு யாழ்ப்பாணப் பூச்சியியல் சங்கம் (JES) சான்றிதழ் வழங்கும் எனத் திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி குறித்த தகவல்களைப் பொதுமக்களுடனும், குறிப்பாகப் பாடசாலை மாணவர்களுடனும் பகிருமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
திட்டம் குறித்த மேலதிக விவரங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பின்வரும் இணையத்தளத்டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இலங்கையில் ‘Citizen Science’ திட்டம் தொடக்கம் இலங்கையில் டெங்கு ஒழிப்பு முயற்சிகளில் பொதுமக்களையும் பாடசாலை மாணவர்களையும் ஈடுபடுத்தும் நோக்கில் ‘Citizen Science’ விழிப்புணர்வுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சின்னத்தம்பி நோபிள் சுரேந்திரன் அவர்களின் மேற்பார்வையில், மீரா கேசவன் இத்திட்டத்துக்குத் தலைமை தாங்குகிறார்.
இந்தத் திட்டம் யாழ்ப்பாணப் பூச்சியியல் சங்கம் (Jaffna Entomological Society – JES) மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் (Center for Research in Entomology, University of Jaffna – CRE) ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.
திறந்த வெளிகளிலோ கொள்கலன்களிலோ தேங்கியுள்ள நீரைப் படம் அல்லது வீடியோ எடுத்து WhatsApp வழியாக அனுப்புமாறு திட்டக் குழுவினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். தேங்கிய நீர் சுத்தமாகவோ அசுத்தமாகவோ இருந்தாலும் அதைப் பதிவு செய்து அனுப்பலாம். டெங்குவைப் பரப்பும் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் கண்டறிய இந்தப் பதிவுகள் உதவும்.
பங்கேற்க விரும்புவோர் தெளிவான படம் அல்லது வீடியோவை எடுத்து, +94 77 822 0926 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பலாம். இருப்பிடத்தைப் பகிருமாறு பதில் செய்தி வந்ததும், அதிலுள்ள பொத்தானைத் தொட்டுத் தமது தற்போதைய இருப்பிடத்தை அனுப்ப வேண்டும்.
இருப்பிடம் கிடைத்ததும் WhatsApp வழியாக உறுதிப்படுத்தல் செய்தி வரும். இதற்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரமே ஆகும் என்று திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் அல்லது வீடியோ எடுத்த பிறகு, பாதுகாப்பாக அகற்றக்கூடிய தேங்கிய நீரை அகற்றுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்புவோருக்கு யாழ்ப்பாணப் பூச்சியியல் சங்கம் (JES) சான்றிதழ் வழங்கும் எனத் திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி குறித்த தகவல்களைப் பொதுமக்களுடனும், குறிப்பாகப் பாடசாலை மாணவர்களுடனும் பகிருமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். திட்டம் குறித்த மேலதிக விவரங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பின்வரும் இணையத்தளத்தில் கிடைக்கின்றன.
டெங்கு விழிப்புணர்வு குறித்த மேலதிகத் தகவல்களுக்கு: https://cg.itimpress.au/