கிளிநொச்சியில் கிராமசேவையாளருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்

Kilinochchi SL Protest Floods In Sri Lanka
By Independent Writer Dec 21, 2025 01:39 PM GMT
Report
Courtesy: linton

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர், ஆராதிநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராம சேவையாளருக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

100 ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம சேவையாளர் நேரில் சென்று பார்வையிடவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கிராமசேவகர் கீழ்த்தரமான பேச்சு

தமது நிலைமையினைப் பார்வையிடுமாறு தொலைபேசியூடாக கேட்ட குடும்பப்பெண்ணிடம் 'சோத்துக்கு வழியில்லாதவர்களுக்கு சாமான் கொடுக்கவில்லை' என ஏசியதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் கிராமசேவையாளருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள் | People Protest Against Grama Sevak In Kilinochchi

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் உதவிகளையும் வழங்குமாறு கோரிய நிலையில் தாம் பல வாரங்களாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையிலும் கிராம சேவையாளர் தம்மைப் பார்வையிட்டு அனர்த்தம் தொடர்பான எவ்வித பதிவினையும் மேற்கொள்ளவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

தம்பகாமம் kn 86 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர், ஆராதிநகர் ஆகிய பகுதிகளில் யுத்தத்தின் பின் மக்கள் படிப்படியாக மீளக்குடியேறினர். அவர்களில் காணியற்ற மக்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டன.

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பிரதேசம்

வழங்கப்பட்ட காணிகளில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாரி காலங்களில் மக்களின் வீடுகள் மற்றும் தோட்டக்காணிகளில் வெள்ளம் புகுந்து பிரதேசமே வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

கிளிநொச்சியில் கிராமசேவையாளருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள் | People Protest Against Grama Sevak In Kilinochchi

இதனால் அன்றாடம் தொழில் செய்யும் வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர், ஆராதிநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது.

 குழந்தைகள், முதியவர்கள் வசிக்கும் வீடுகளில் இடுப்பிற்கு மேல் வெள்ளம் நிற்பதால் தம்மால் தொடர்ச்சியாக மழைக்காலம் நிறைவடையும் ஐந்து மாதங்கள் வரையும் தாம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டுக்கட்டை போடும் கிராமசேவகர்

குறித்த பகுதியிலுள்ள குளம் ஒன்றினை புனரமைப்பு செய்து வெள்ளநீர் முறையாக வழிந்தோடுவதற்கு கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து, ஏனைய அரச தரப்புக்களிடம் அனுமதி பெற்ற நிலையிலும் கூட அதற்கு கிராம சேவகர் முட்டுக்கட்டை போடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கிளிநொச்சியில் கிராமசேவையாளருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள் | People Protest Against Grama Sevak In Kilinochchi

எனவே குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் தமக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னாரில் கிராம சேவையாளரின் அடாவடி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை

மன்னாரில் கிராம சேவையாளரின் அடாவடி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன் : ரஜீவன் எம்.பி பகிரங்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன் : ரஜீவன் எம்.பி பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026