ஊழல் அமைச்சர் உடனடியாக வெளியேற வேண்டும்; கொழும்பு எரிசக்தி அமைச்சின் முன்னாள் போராட்டம்!
மின்சார உயர்வைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சருக்கு எதிராகவும், மின்சாரத்துறையில் காணப்படும் முறைக்கேடுகள் தொடர்பிலும் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள வலுசக்தி அமைச்சுக்கு முன்னாள் மின்சாரம் பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கான காரணம்
மின்சாரக்கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்திருக்கும் எரிசக்தி அமைச்சுக்கு எதிராக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட ஊழல்வாதிகள் வீட்டுக்குச் செல்ல வேண்டும், அதன்மூலம் மின்சக்தித்துறை காப்பாற்றப்பட வேண்டும் எனவும் பல்வேறு பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மின்சாரக்கட்டண உயர்விற்கு எதிரான போராட்டங்களுக்கு அனைவரும் ஒன்று திரளவேண்டும் எனவும் மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.