சட்டவிரோத அகழ்வுப்பணியில் ஈடுபட்ட நபர் கைது!
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Pavi
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில் சட்டவிரோத தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யபட்ட நபர் 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத அகழ்வு பணி
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேயங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தமன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி