யாழில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள் - கடை மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
முகமாலை (Muhamalai) வடக்கு A-9 வீதி ஓரமாக வியாபார நிலையம் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலானது முகமாலை வடக்கு A-9 வீதியில் நேற்று 19.02.2025 நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
செ.நாகசெல்வம் என்பவரது கடையே இவ்வாறு தாக்குலுக்கு உள்ளாகியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது தடவையாக சம்பவம்
குறிந்த கடையின் மீது 2020 ஆண்டில் கழிவு ஓயில் வீசப்பட்டதுடன் 2021 ம் ஆண்டில் மாலை மூகமூடி அணிந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்களால் இரும்புக்கம்பி கொண்டு கடையின் சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மூன்றாவது தடவையாக தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது
இதேவேளை, இன்றையதினம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் காவல் நிலைய போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
