எதிர்க்கட்சியினருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மலையக மக்கள் : தேங்காய் உடைத்து எதிர்ப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தற்போதைய அரசாங்கத்தால் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிக்க திறைசேரியிலிருந்து ரூ. 200 ஒதுக்கப்பட்டதற்கு எதிராக சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக நோர்வுட் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் நேற்று(16) மதியம் தங்கள் எதிர்ப்பைக் காட்ட 108 தேங்காய்களை உடைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள், வரலாற்றில் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலம் ஊதியத்தில் ஒருபோதும் அதிகரிப்பு பெறவில்லை .
வரலாற்றில் முதல்முறை
வரலாற்றில் முதல்முறையாக, ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் எந்தவொரு வேலைநிறுத்தங்கள் அல்லது போராட்டங்கள் இல்லாமல் ரூ. 400 சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினர்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்ட அரசியல்வாதிகளும் சில எதிர்க்கட்சி பிரமுகர்களும் தோட்ட மக்களின் துன்பங்களை அங்கீகரிக்கவில்லை.
துன்பங்களுடன் இணையும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு
மேலும் அவர்களின் துன்பங்களை அங்கீகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிர்காலத்தில் தங்கள் முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

images -ada
லூல்கந்துர தோட்டம்
மேலும், இலங்கையில் முதல் முதலாக தேயிலை நாட்டப்பட்ட லூல்கந்துர தோட்டத்தில் தேயிலையை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லரின் சிலைக்கும் முன்பதாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் தோட்டப்புற மக்களுக்காக வழங்க இருக்கின்ற நாளாந்த வரவுக்கான கொடுப்பனவாகிய 200 ரூபாய்க்கு குறித்த மக்கள் நன்றி தெரிவித்திருந்தனர்
மேலும், அதனை நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசிய நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பையும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிகழ்விற்கு தோட்ட உட்கட்டமைப்பின் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சிவப்பிரகாசம், ஹங்குரான்கெத்த பிரதேச சபை உறுப்பினரும் தேசிய மக்கள் கட்சியின் அமைப்பாளரும் ஆகியலியோ பெனடிக்கும் கலந்துக்கொண்டருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்