பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பு : படைத்தரப்பு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு

Sri Lanka Army Jaffna Gajendrakumar Ponnambalam NPP Government
By Erimalai Aug 15, 2026 06:15 AM GMT
Report

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

குறித்த காணியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் படையினர் ஏமாற்றும் விதமாக செயற்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நேற்று (14) இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக பழைய கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வடமராட்சியில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்கிற்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு!

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்கிற்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு!

உறுதியளித்த கௌசல்யா ஆரியரத்ன

அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம் உறுதியளித்திருந்தார்.

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பு : படைத்தரப்பு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு | Pointpedro Post Office Land Under Military Control

இது தொடர்பில் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் பருத்தித்துறை அஞ்சல் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடத்தை விடுவிக்காது தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டு அதற்கு அருகாமையில் உள்ள சிறிய நிலப்பரப்பினை வழங்க படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இன்றைய களவிஜயத்தின் போது குறித்த ஏமாற்று அம்பலமாகியுள்ளது.

குறித்த இடத்தில் அஞ்சல் அலுவலகத்தை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அஞ்சல் நிலைய கட்டிடத்தை அமைக்க முடியாது என தொடர்புடைய அஞ்சல் நிலைய கட்டுமான பொறியியல் துறை தரப்பினரால் கூறப்பட்டிருப்பதாகவும், பெருத்தமற்ற சிறய இடத்தை விடுவிக்கவே இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பருத்தித்துறை அஞ்சல் நிலைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சிலாபத்தில் கரையொதுங்கிய படகு: கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை

சிலாபத்தில் கரையொதுங்கிய படகு: கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை

 காணியை விடுவிக்க நடவடிக்கை 

படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பு : படைத்தரப்பு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு | Pointpedro Post Office Land Under Military Control

தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் மக்களின் காணிகள் மக்களுக்கே என தேசிய மக்கள் சக்தி தரப்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் செயற்பாட்டில் அதனை நடைமுறைப்படுத்த இதுவரை எதையும் செய்யவில்லை.

மாறாக மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் காணிகள் மற்றும் அரச காணிகள் என எதனையும் விடுவிக்க இந்த அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில் அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தாய் : இறுதி அஞ்சலி செலுத்த மறுத்த பெக்கோ சமன்!

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தாய் : இறுதி அஞ்சலி செலுத்த மறுத்த பெக்கோ சமன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020