யாழ்ப்பாணத்தில் காவல்துறையின் செயற்பாடு : அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி

Sri Lanka Police Jaffna Douglas Devananda
By Jaso Jan 03, 2024 10:01 PM GMT
Report

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாக அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே சூம் காணொளி ஊடாக இன்று(03.01.2024) நடைபெற்ற  கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் காவல்துறையின் செயற்பாடு

 போதைப் பொருள் பாவனைக்கு எதிராக யாழ் மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அதிருப்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள அமைச்சர், சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்வதற்கான காலஅவகாசத்தினை காவல்துறையினர் வழங்கியதான சந்தேகம் மக்கள் மத்தியில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் காவல்துறையின் செயற்பாடு : அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி | Police Action In Jaffnai Douglas Displeased

கார்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

கார்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி

அதேபோன்று, வற் அதிகரிப்பு உட்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் காத்திரமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் காவல்துறையின் செயற்பாடு : அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி | Police Action In Jaffnai Douglas Displeased

கடற்றொழிலாளர் விவகாரத்தினை தீர்ப்பதற்கு இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார்ந்தோரை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இணைந்த செயற்குழுவின் சந்திப்பு மற்றும் இருநாட்டு அமைச்சர் மட்டத்திலான சந்திப்பு போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

தென்னாபிரிக்காவில் மோசமான சாதனையை பதிவு செய்த இந்திய அணி

தென்னாபிரிக்காவில் மோசமான சாதனையை பதிவு செய்த இந்திய அணி

அதேபோன்று, பனை தென்னை வள கூட்டுறவுச்சங்களின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான கடன் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல் மற்றும் வற் அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றால் நாடளாவிய ரீதியில் பாதிப்பை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் இன்றைய கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்