குதிரைப்பந்தய திடல் பல்கலைக்கழக மாணவி கொலை - காவல்துறை மீது குற்றசாட்டு!
அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பு குதிரை முகத்திடலில் வைத்து அவரது காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த காதலன் காவல்துறையினருக்கு கொலைக்கான காரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
குற்றவாளியால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தை காவல்துறையினர் ஊடகங்களுக்கு கசிய விட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றசாட்டு

காவல்துறை மற்றும் நீதித்துறையின் நம்பிக்கையின் அடிப்படையில் சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்தை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில் இலங்கை காவல்துறை மீது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில், இந்த உணர்வுபூர்வமான வாக்குமூலம் எவ்வாறு கசிந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலசுக்கு அறிவிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேசமயம், இதேபோல் முக்கியமான பல தகவல்களை கசிய விடுவதில் காவல்துறை ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.