யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விபத்து - காவல்துறை உத்தியோகஸ்தர் பலி
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணம் - கேரதீவு சங்குப்பிடி பாலத்திற்கு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி காவல் நிலையத்தில் கடமையாற்றும் மன்னரை சேர்ந்த ஆர்னோல்ட் அன்ரனி (வயது 31) என்ற காவல்துறை உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் பயணித்த போது, , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த காவல்துறை உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |