இவரைத் தெரியுமா? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை (படம்)
police
people
wanted suspect
By Jaso
போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நடத்தப்படும் விசாரணைகளுக்காக சந்தேகநபர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், எனவே அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 071-8592727 / 011- 2343333 / 011- 2343334 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.