மக்களின் காணிகளை கையகப்படுத்திய துறைமுக அதிகாரசபை: குகதாசன் எம்பி குற்றச்சாட்டு

Trincomalee Sri Lanka Kathiravelu Shanmugam Kugathasan
By Harrish Jan 03, 2025 12:02 PM GMT
Report

துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை எனவும் மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்(K. S. Kugathasan) குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலை பிரதேச செயலகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முத்துநகர் பகுதியில் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதோடு விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். கிட்டத்தட்ட 1887 ஏக்கருக்கு மேற்பட்ட குடியிருப்பு காணியில் இவர்கள் வசித்து வருகின்றார்கள்.

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்

கையகப்படுத்திய  நிலங்கள்

இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகார சபையினர் ஒரு இரவிலேயே கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 1971ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே முத்துநகர் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கான ஆதாரங்கள் உட்பட ஆவணங்களும் மக்களிடம் இருக்கின்றன.

எனவே அவர்களுடைய காணி விடுவிப்பு தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் அக்மீமன மற்றும் அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏழை மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் காணிகளை கையகப்படுத்திய துறைமுக அதிகாரசபை: குகதாசன் எம்பி குற்றச்சாட்டு | Port Authority Taking Over Peopleland Gugadasan Mp

அத்துடன், யுத்தத்தால் இடம்பெயர்ந்த வெல்வெரி மக்களுடைய காணிகளையும் விடுவித்து தற்போது இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களையும் அங்கே மீளகுடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெல்வெரி பகுதியில் மக்கள் வாழ்ந்த வீடுகள், உடைந்த கட்டடங்கள் கிணறுகள், பலன்தரு மரங்கள் இன்னும் அங்கே இருக்கின்றன. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை வரவேண்டாம் என்று கூறிவிட்டு அந்த காணிகளை தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாம் ஏனைய காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது. எனவே இவற்றையும் விடுவிக்க இந்த அவையினூடாக கோரிக்கை விடுக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் குளிர்பானம் அருந்திய யுவதிக்கு நேர்ந்த கதி! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

கொழும்பில் குளிர்பானம் அருந்திய யுவதிக்கு நேர்ந்த கதி! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

உலகை உலுக்க காத்திருக்கும் மற்றுமொரு வைரஸ்: முன்னாயத்தமாகும் இலங்கை

உலகை உலுக்க காத்திருக்கும் மற்றுமொரு வைரஸ்: முன்னாயத்தமாகும் இலங்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024