பேராதனை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட களங்கம்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டமை இளங்கலை மாணவர்களின் உரிமைகள் மற்றும் சட்டரீதியான பாரிய மீறல் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க எழுத்து மூலம் உபவேந்தருக்கு அறிவித்துள்ளார்.
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவிற்கு இடையூறு விளைவிப்பவர்களை
பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம். டி.கல்பவம்சவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பட்டமளிப்பு விழாவிற்கு இடையூறு விளைவிப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும், இது தொடர்பில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற சபைக்கு முறையான தகவல் தெரிவித்து மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குப் பெரும் சேதம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவொன்று பணிப்புறக்கணிப்பு காரணமாக பிற்போடப்பட்டமையால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சிலரின் தன்னிச்சையான செயல்களால் பல்கலைக்கழகத்தின் முக்கியமான கல்வி விழா தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |