சாவகச்சேரிமண்ணில் “தீப்பந்தத்துடன்” எழுச்சி பெற்ற பொத்துவில் - பொலிகண்டி மக்கள் பேரணி
srilanka
protest
polikandi
poththuvil
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரெழுச்சிப் பேரணி தற்போது சாவகச்சேரி நகரை அடைந்துள்ளது. சாவகச்சேரிக்குள் நுழைந்தவுடன் தீப்பந்தங்கள் ஏந்தி பேரணி முன்னெடுக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜின் தென்மராட்சி மண்ணில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு எழுச்சிப் பேரணியை தொடர்ந்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணில் கால்பதித்தது.
கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பமாகிய இறுதிநாள் பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் முகமாலையில் பெரும் வரவேற்புடன் பெருந்திரளானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பேரணி முக்கிய இடங்கள் மற்றும் நினைவிடங்களுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி