இலங்கைக்கு கிடைத்த பாராட்டு!
srilanka
who
covid19
vaccine
corona
By S P Thas
இலங்கையின் கொவிட் எதிர்ப்பு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இலங்கை முழுவதிலும் சுமார் ஐந்து லட்சம் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றறப்பட்டுள்ளன.
ஒரே நாளில் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐந்து லட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த்துக் கொள்வதாக இலங்கை சுகாதார அமைச்சிற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 418,000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகள் முதல் மாத்திரையாக வழங்கப்பட்டுள்ளதுடன், 56738 பேருக்கு இரண்டாம் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
38430 பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 2168 மொடர்னா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி