இணையத்தில் வைரலாகும் அநுரவின் உருவக்கேலி செய்த புகைப்படம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தொடர்பான மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு பேர்லினின் பெல்வீவ் மாளிகையில் அரச மரியாதையுடன் வரவேற்று வழங்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் - வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) நேற்று (11) அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமோக வரவேற்களிக்கப்பட்டுள்ளது.
உருவக்கேலி செய்த புகைப்படம்
இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்க ஜேர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

இந்த அணிவகுப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி ஆகியோர் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொழில்நுட்பங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
குறித்த புகைப்படம் அநுரகுமார திசாநாயக்கவின் செய்து உயரத்தை மிகவும் குறைத்துக் காட்டுவது போன்று உருவக்கேலி செய்து மாற்றியமைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள புகைப்படத்தினை இணையவாசிகள் அதிகமாக பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        