இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே பேச்சுவார்த்தை!

Ranil Wickremesinghe Selvam Adaikalanathan Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Dec 23, 2022 01:08 PM GMT
Report

சிறிலங்கா அதிபரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,   

“இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் அதிபரின் இந்த பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே. எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம்.

அதில் இராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்து நிலங்கள் அபகரிக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானமாக அதைச் சொல்லி இருந்தோம்.

கால அவகாசம் கோரும் ரணில்

இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே பேச்சுவார்த்தை! | President Of Sri Lanka Tamil India In Negotiations

அந்த அடிப்படையில் அதிபர் இந்த 31ஆம் திகதி வரையில் கால அவகாசம் கேட்டிருந்தார். அந்த வகையில் இராணுவம் எந்தெந்த இடங்களை விடப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

பேச்சுவார்த்தையின் போது நாங்களும் இந்த இராணுவம் கைப்பற்றிய சில இடங்களை வரைமுறையோடு எத்தனை ஏக்கர் எங்கெங்கு பிடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட இருக்கிறோம்.

அதேபோல் மிக மோசமாக வயல் காணிகளிலும் மக்களின் வீட்டுக் காணிகளிலும் எல்லைகளை போடுகின்ற ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு அவசரப்பட்டு செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பேச்சுவார்த்தை என்பது அனைவரையும் ஒன்று திரட்டுகின்ற அல்லது ஒற்றுமைப்படுத்துகின்ற செயற்பாடாக அமைய வேண்டும். ஆனால் இந்த 31 ஆம் திகதி வரை எந்த ஒரு திருப்பு முனையும் இல்லாத நிலையில் அதிபர் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நிர்ணயம் செய்திருக்கின்றார்.

இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. 31ம் திகதிக்கு முன்பு நாங்கள் வைத்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆணித்தரமாக இருக்கின்றோம்.

அரசியல் கைதிகள் 5 பேர் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறுவது நல்லபடியாக இருந்தாலும் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிவாரணம்

இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே பேச்சுவார்த்தை! | President Of Sri Lanka Tamil India In Negotiations

குறிப்பாக தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது. அதிபர்  இதை கவனம் எடுத்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு அதிபரால் முடியும்.

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முந்தைய நிதி அமைச்சர் ஒரு லட்சம் என்றும் இந்த நிதி அமைச்சர் 2 லட்சம் தருவதாக கூறுகிறார்கள்.

எங்களுடைய உறவுகளின் பெறுமதி என்பது வெறும் 2 லட்சம் தானா ? அவை நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு பிரச்சனைகள் இருக்கையில் நாங்கள் உடனடியாக சென்று இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இதனை மலிவுபடுத்துகின்ற செயற்பாட்டினை செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து.

மேலும் எங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக. அதற்காக பல போராளிகள் பல மக்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றார்கள்.

இந்தியாவின் அனுசரணை

இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே பேச்சுவார்த்தை! | President Of Sri Lanka Tamil India In Negotiations

ஆகவே நிலங்கள் விடுவிக்கப்படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்று போகும். அவ்வாறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட உடன் பிடிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆனால் இது எப்படி சாத்தியம் எவ்வாறு அமையப் போகிறது என்பது தெரியாது.

ஆனால் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் தரப்பு ஆகிய நாங்கள் சாதிக்க முடியும். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய செயற்பாடுகளின் படி பேச்சுவார்த்தை என்பது இந்தியாவினுடைய அனுசரணையோடு ஏனைய நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

அந்த வகையில் சில பேர் கேட்கிறார்கள் பேச்சு வார்த்தை ஆரம்பத்தில் ஏன் இதைச் சொல்லவில்லை என்று? ஆனால் நான் அதை சொல்லாததற்கான காரணம் அதிபரின் நிகழ்ச்சித் திட்டம் என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை.

ஆனால் இப்பொழுது நாங்கள் ஒரு கால வரையறையை கொடுத்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் அவை நடைபெற வேண்டும் அதிபர் நல்ல நோக்கத்திற்காக இதனை கையில் எடுத்துள்ளாரா? அல்லது பொருளாதாரப் பிரச்சனைகளை மேம்படுத்துவதற்காக செய்கிறாரா என்றொரு கேள்வி இருக்கிறது.

ஆனாலும் இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவ விட்டு விடக்கூடாது. ஆகவே தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய நிபந்தனைகளையும் எங்களுடைய கோரிக்கைகளையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015