காலி முகத்திடலில் பெண்ணின் விபரீத முடிவு : அதிரடியாக காப்பாற்றிய சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு பிரிவு
Galle
Colombo Hospital
By Kathirpriya
காலி முகத்திடலை அண்மித்த கடலில் மூழ்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, காலி முகத்திடலில் கொடிக்கம்பத்திற்கு அருகில் பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்துள்ளார்.
காவல்துறை ஆய்வாளர் ஏ.எச்.பி.எஸ். அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர்.
அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்