முன்னறிவிப்பு எதுவுமின்றி உக்ரைனுக்கு திடீரென சென்ற இளவரசர் ஹரி
பிரிட்டனின் இளவரசர் ஹரி, அறிவிக்கப்படாத பயணமாக இன்று(23) வியாழக்கிழமை கீவ் நகருக்கு வந்தடைந்தார்.
"உக்ரைன் என்ன சவால்களை எதிர்கொள்கிறது என்பதை உள்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நினைவூட்டுவதற்கும்" மற்றும் தனது தனிப்பட்ட ஆதரவை வெளிப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியே இந்தப் பயணம் என பிரிட்டிஷ் இளவரசர் விளக்கினார் என உக்ரைனிய அரசு செய்தி நிறுவனமான Ukrinform தெரிவித்துள்ளது.
மூன்றாவது பயணம் இதுவாகும்
ஹரி இதற்கு முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, போர் வீரர்களின் மறுவாழ்வுக்கான ஆதரவு குறித்து தனது குழுவினருடன் விவாதித்தார்.
BREAKING: Prince Harry has arrived in Ukraine for an unannounced visit to Kyiv. pic.twitter.com/evFmkuPQS6
— Chris Ship (@chrisshipitv) April 23, 2026
2022 பெப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து,ஹரி,உக்ரைனுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.
மேலும், அவரது மறைந்த தாயார் இளவரசி டயானாவால் முன்னெடுக்கப்பட்ட ஹாலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் நிபுணர்களையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |